மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

பிளஸ் 1 ரிசல்ட்: கோவை முதலிடம்!

பிளஸ் 1 ரிசல்ட்: கோவை முதலிடம்!

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு இன்று (ஜூலை 31) முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 தேர்வில், 8,32,475 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். 4,35, 881 மாணவிகளும், 3,79,561 மாணவர்களும் தேர்வு எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்

அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் 98.10 சதவிகிதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கன்னியாகுமரி 97.30%, திருநெல்வேலி - 96.92%, தூத்துக்குடி - 97.15%, ராமநாதபுரம் - 96.97%, சிவகங்கை - 97.36%, விருதுநகர் - 97.90%, தேனி - 96.02%, மதுரை - 96.54%, திண்டுக்கல் - 96.20%, திருப்பூர் - 97.41%, ஈரோடு - 97.39%, சேலம் - 95.71%, நாமக்கல் - 97.14% கிருஷ்ணகிரி - 92.80%, தருமபுரி - 95.73%, புதுக்கோட்டை - 95.87%, கரூர் - 97.51%, அரியலூர் - 97.12%, பெரம்பலூர் - 96.91%, திருச்சி - 97.43%, நாகப்பட்டினம் - 94.22%, திருவாரூர் - 93.94%, தஞ்சாவூர் - 97.04%, விழுப்புரம் - 91.96%, கடலூர் - 93.43%, திருவண்ணாமலை - 94.70%, வேலூர் - 94.70%, காஞ்சிபுரம் - 95.63%, திருவள்ளூர் - 95.62%, சென்னை - 97.29 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.

பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள் 3.11% கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியான தேர்ச்சி விகிதம்

வேதியியல் - 99.95 %

கணினி அறிவியல் - 99.25 %

கணிதம் - 98.56 %

கணக்கு பதிவியல் - 98.16 %

உயிரியல் - 97.64 %

இயற்பியல் - 96.68 %

வணிகவியல் - 96.44 %

விலங்கியல் - 94.53 %

தாவரவியல் - 93.78 %

பிளஸ் 2 மறுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டது. இதில், தேர்வு எழுதிய 519 பேரில் வெறும் 180 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த180 மாணவர்களில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020