மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

குமரியில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட்ட நீர், மண்!

குமரியில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட்ட நீர், மண்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5ஆம் தேதி நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து நீர், மண் ஆகியவை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட இருக்கிறது. அதற்கான பூமி பூஜை வருகிற 5ஆம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் ராமர் கோயில் பூமி பூஜையின்போது பயன்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள புனித தலங்கள் மற்றும் தீர்த்தங்களில் இருந்து புனிதமானதாக கருதப்படும் நீர், மண் ஆகியவற்றை இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேகரித்து அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் இருந்து நீர், மண் எடுக்கப்பட்டு அயோத்திக்கு நேற்று (ஜூன் 30) அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து மண்ணும், நீரும் சேகரிக்கப்பட்டது. முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி சிறப்பாக நடைபெற வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் பெறப்பட்டது. அந்த பிரசாதமும் நீர் மற்றும் மண்ணுடன் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜ்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon