குறையும் கொரோனா: சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுமா?

public

சென்னையில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்று மது பிரியர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்று மட்டும் விடுமுறை விடப்பட்டு மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு 100கோடி ரூபாய்க்கு மேலும், சனிக்கிழமைகளில் 150 கோடி ரூபாய்க்கு மேலும் மதுபானங்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பு தொடர்பான வழக்கு உச்ச, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் தங்கமணி , உயரதிகாரிகள் மட்டத்தில் கலந்தாலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்றாலும், மற்ற மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் திருப்திகரமாகவே உள்ளது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சமயத்தில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு எனச் சென்னையின் மாவட்ட எல்லைப்பகுதிகளிலிருந்து மது வாங்கி விற்பனை நடைபெறுவது கண்டுகொள்ளப்படவில்லை. எனவே தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் டாஸ்மாக் திறப்பு குறித்து எந்த முடிவும் முதல்வர் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்று (ஜூலை 30) செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அடைக்கும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறியுள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *