மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு கார்ன் இனிப்புச் சுண்டல்!

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு கார்ன் இனிப்புச் சுண்டல்!

இப்போது டிபார்ட்மென்டல் கடைகளில் விதவிதமான சோள வகைகள் கிடைக்கின்றன. கண்ணைப்பறிக்கும் விதங்களில் பார்த்ததும் வாங்கத்தூண்டும் இந்த சோள வகைகள் பெயரளவில் வெவ்வேறாக இருந்தாலும் இவற்றைச் சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கும். சுலபமாகச் செய்யக்கூடிய இந்த இனிப்புச் சுண்டல் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

என்ன தேவை?

ஆறு மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்த வெள்ளை சோளம் - கால் கப்

வேகவைத்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - கால் கப்

வேகவைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய பேபி கார்ன் - கால் கப்

உலர்திராட்சை, விதை நீக்கிய பேரீச்சை (நறுக்கியது) - தலா 2 டேபிள்ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்

பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (பனீரை வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக்கொள்ளவும்)

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

உலர் மிக்ஸ்டு விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுக் கிளறி, சிறிய பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: கார்ன் கபாப்

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது