மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ரிசல்ட்?

தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ரிசல்ட்?

பனிரெண்டாம் வகுப்பில் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்காக அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இன்று வெளியிடப்பட்ட நிலையில் 92.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பேருந்து வசதிகள் இன்றி மாணவர்களால் இறுதித் தேர்வை எழுத வரமுடியவில்லை. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறுதித் தேர்வை எழுதவில்லை அவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால், இறுதி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்களுக்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளான வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியிடப்படும். ஜூலை 27ஆம் தேதி நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மறுதேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மறு தேர்வு முடிந்த பின்னர் தேர்வு எழுதிய அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon