pரிலாக்ஸ் டைம்: டிரை ஃப்ரூட்ஸ் ஸ்வீட் அவல்!

public

மூன்று வேளை உணவில் மட்டும் சரிவிகிதச் சத்துணவைப் பின்பற்றி விட்டு, இடையில் கொறிக்கும் நொறுக்குத்தீனிகள் கொழுப்பு மிகுந்தவையாக இருந்தால் கண்டிப்பாக அவை உடல் நலனைக் கெடுக்கும். உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளே முக்கியமான காரணமாக அமையும். நாள் முழுக்க நீங்கள் தேனீயாய் பறக்க நொறுக்குத் தீனியிலும் போதிய சத்துகள் அவசியம். அதற்கு இந்த டிரை ஃப்ரூட்ஸ் ஸ்வீட் அவல் உதவும்.

**எப்படிச் செய்வது?**

100 கிராம் கெட்டி வெள்ளை அவலைக் கழுவி வைத்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை தலா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து வறுத்தெடுக்கவும். நான்கு டீஸ்பூன் தேங்காய்த் துருவலைத் தனித்தனியாக வறுத்து எடுத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 100 மில்லி பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கழுவிய கெட்டி அவல் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு நெய், 2 சிட்டிகை ஏலக்காய்த்தூள், வறுத்த நட்ஸ், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சத்தான டிரை ஃப்ரூட்ஸ் அவல் ரெடி.

**சிறப்பு**

உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கின்றன. கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள், சிந்திக்கும் திறன், கவனத்திறன், நினைவாற்றல், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றை மேம்படுத்தத் துணைபுரிகின்றன.

**குறிப்பு: சிவப்பு அவலிலும் செய்யலாம்.**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *