மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பாதுகாப்பாக இருங்கள், நேர்மறையாக யோசியுங்கள்: ஜெயரஞ்சன்

பாதுகாப்பாக இருங்கள், நேர்மறையாக யோசியுங்கள்: ஜெயரஞ்சன்

ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 30) தனியார் மயத்துக்கான பல தளங்களை மத்திய அரசு திறந்துவிட்டுக்கொண்டே செல்வதாகத் தெரிவித்த ஜெயரஞ்சன், இதனை சாதனையாக சொல்லும் அளவுக்கு நிலை சென்றுள்ளது என விமர்சித்தார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்து விவரித்ததோடு, இதனால் ஏற்படும் வெறுப்புகளை மடைமாற்றம் செய்யும் நிகழ்வுகள் பற்றியும் தெரிவித்தார். ஏற்றத்தாழ்வுகளையும் குறைப்பதன் மூலம் வெறுப்பு அரசியலை கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் மக்களுக்கு குறைந்தபட்ச நியாயத்தையாவது அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

முழுக் காணொலியையும் கீழே காணலாம்...

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon