மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்!

உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக அட்டார்னி ஜெனரலாக கே.கே வேணுகோபால் இருந்து வருகிறார். அதுபோலவே சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் இவர்கள் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.

அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு நேற்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளது.

இதேபோலவே, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவரின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் மத்திய அரசின் சார்பில் ஆஜராக ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சங்கரநாராயணன், இந்த பதவியில் நீடிப்பார் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீநிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் ராஜகோபால்தான் வாதிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழில்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon