மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

மன அழுத்தத்தில் மாஜிஸ்திரேட்டை திட்டியிருக்கலாம்: அரசு விளக்கம்!

மன அழுத்தத்தில் மாஜிஸ்திரேட்டை திட்டியிருக்கலாம்: அரசு விளக்கம்!

மன அழுத்தத்தில் காவல் துறையினர் மாஜிஸ்திரேட்டை திட்டியிருக்கலாம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை தாக்குதலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு ஆஜராகிய தூத்துக்குடி மாவட்ட ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் மின்னஞ்சல் வழியாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு புகார் அனுப்பினார்.

.உடனிருந்த காவலர் மகாராஜன், நீதிபதியிடம் " உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா" என்று அவதூறாக பேசிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (ஜூன் 30) விசாரணை நடந்தது. அப்போது, புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் மூவரும் ஆஜராகியிருந்தனர். அப்போது, மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்தது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

. இதற்கு விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “கடும் மன அழுத்தம் காரணமாக விசாரணை நடத்த வந்த மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் அவமதிக்கும் விதத்தில் பேசியிருக்கலாம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 3 பேருக்கும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

எழில்

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்!

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon