மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜுன் 2020

கொரோனா: படிப்பில் பின்னடைவு ஏற்படும் – யுனெஸ்கோ!

கொரோனா: படிப்பில் பின்னடைவு ஏற்படும் – யுனெஸ்கோ!

கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித் துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு, “கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்.

பள்ளிகள் மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பள்ளி உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைத் திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து கவலைப்படுவார்கள். மிகக்குறைவான பள்ளிகளில்தான் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற முடியும். மொத்தத்தில், மாணவர்களின் படிப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.

ஆன்லைன் வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது, சமூக - பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

செவ்வாய் 30 ஜுன் 2020