மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

ஃபேஸ்புக்கில் மனைவியின் படம்: குழந்தைகளுடன் கணவர் தற்கொலை!

ஃபேஸ்புக்கில் மனைவியின் படம்: குழந்தைகளுடன் கணவர் தற்கொலை!

அடுத்தவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் மனைவியின் படம் இருப்பதைப் பார்த்த கணவன், மூன்று குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட அவலம் நடந்துள்ளது.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலசோப்ராவில் உள்ள பபுல் பாடாவைச் சேர்ந்தவர் 35 வயது கைலாஷ் பர்மார். இவரை விட்டு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். கைலாஷ் பர்மார் தன் 12 வயது மகன், 8 மற்றும் 3 வயது மகள்களுடன் வசித்து வந்தார்.

பிரிந்து சென்ற தனது மனைவியின் படம் வேறு ஒருவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்ததை கண்டு விரக்தி அடைந்ததால், மூன்று குழந்தைகளைக் கொன்று கைலாஷ் பர்மாரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் (ஜூன் 28) இரவு பூட்டிய வீட்டுக்குள் கைலாஷ் பர்மார் தனது குழந்தைகள் மூன்று பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜ்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon