மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்தியா திரும்புபவர்களுக்காக 170 விமானங்கள்!

இந்தியா திரும்புபவர்களுக்காக 170 விமானங்கள்!

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் நபர்களுக்காக 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் 23ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியது. மருத்துவப் பொருட்களுக்கான விமான சேவைக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

நாட்கள் செல்ல செல்ல ஊரடங்கு முடிவுக்கு வராததால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களின் உறவினர்கள் நீதிமன்றங்களை நாடினர். இதனால் மத்திய அரசு மே 6ஆம் தேதியில் இருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறந்த விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.

இந்நிலையில் 4-வது கட்டமாக ஜூலை 3ஆம் தேதியில் இருந்து ஜூலை 15ஆம் தேதி வரை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்காளதேசம், தாய்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் 170 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 விமானங்கள் இந்தியா இங்கிலாந்துக்கும், 32 விமானங்கள் இந்தியா அமெரிக்காவுக்கும் இயக்கப்பட இருக்கிறது.

-ராஜ்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon