மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

புதிய உச்சம்: ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா!

புதிய உச்சம்: ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு ,3500க்கும் அதிகமாகப் பதிவாகி வந்த நிலையில் இன்று 3,949 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியா, கத்தார், மஸ்கட், சவுதி அரேபியா, மாலத்தீவு ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய பகுதிகளிலிருந்தும் ரயில் மற்றும் விமானம் மூலம் வந்த 108 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3,949 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 86 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று 2,718 பேர் உட்பட மொத்தம் 47, 749 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,331 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது நாளாகப் பலி எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இன்று 62 பேர் உட்பட மொத்தம் 1,141 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 846 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 87 பேரும், காஞ்சிபுரத்தில் 20 பேரும், மதுரையில் 29 பேரும், திருவள்ளூரில் 66 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரைப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,567 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 55,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் புதிதாக 290 பேருக்கும், செங்கல்பட்டில் 187 பேருக்கும் திருவள்ளூரில் 154 பேருக்கும் வேலூரில் 144 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 39 பேர் உட்பட இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வயது விகிதாச்சாரம் அடிப்படையில், 0-12 வயதுக்குட்பட்டவர்கள் 4,225 பேரும், 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 71,728 பேரும், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் 10,271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon