மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

புதியபாதை பயணத்தை வரவேற்போம் - ஜெ.ஜெயரஞ்சன்

புதியபாதை பயணத்தை வரவேற்போம் - ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆற்றிய மன் கீ பாத் உரையில் 2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு புதிய பாதையை வகுக்கும் என்று கூறியது குறித்து இன்று (ஜூன் 29) தனது கருத்துக்களை முன்வைத்தார் ஜெயரஞ்சன். 1980 களுக்குப் பிறகு புதிய பொருளாதார கொள்கை பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற அவர், இதன்மூலம் அடைந்த வளர்ச்சிகளையும் தெரிவித்தார்.

நவ தாரளமயமாக்கல் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டது பற்றி விவரித்த ஜெயரஞ்சன், பொருளாதார ஏற்றத்தாழ்வு முறைகளையும் விளக்கினார். 40 ஆண்டுகளாக போன பாதையிலிருந்து விலகி நாம் செல்லவுள்ள, பிரதமர் சொன்ன புதிய பாதை சமூக நீதிக்கான பாதையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் கூறிப்பிட்டார். அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

முழுக் காணொலியையும் கீழே காணலாம்...

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon