மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

அசாமில் மழை: 18 பேர் பலி, 9 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் மழை: 18 பேர் பலி, 9 லட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து நாட்டில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசம், பிகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அசாம், மேகாலயா மற்றும் பிகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை18 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 9.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி நேற்று (ஜூன் 28) இருவர் பலியாகினர். இதையடுத்து, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon