சண்டே (வெஜ்) ஸ்பெஷல்: பிரியாணி – குருமா – மசாலா கறி

public

இந்த ஊரடங்கு நேரத்தில் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் அசைவ உணவு விற்பனைக்கும் தடை என்கிற நிலை. இப்படிப்பட்ட நேரத்தில்தான்… ‘சூடா சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்; சப்பாத்திக்கு மட்டன் குருமா நல்ல காம்பினேஷன்; மீன் மசாலா கறி இருந்தா போதும் எக்ஸ்ட்ரா ரெண்டு கப் சாதத்தை உள்ளே இறக்கலாம்’ என்று நினைக்கும் மனம். ஞாயிற்றுக்கிழமையே சாதாரணமாகப் போய்விட்ட இன்றைய தினத்தை இந்த பிரியாணி – குருமா – மசாலா கறியை கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த ஒரே மசாலாவைக் கொண்டு செய்து விருந்தளியுங்கள்.

**

கொத்தமல்லி, புதினா மசாலா

**

சுத்தம் செய்து நறுக்கிய புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 4, தக்காளி – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் – அரை கப், நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்… இவை அனைத்தையும் தண்ணீர்விட்டுக் கெட்டியாக மைய அரைக்கவும். கொத்தமல்லி, புதினா மசாலா தயார்.


**

டபுள் பீன்ஸ் அல்லது காராமணி குருமா

**

அரை கப் டபுள் பீன்ஸ் அல்லது காராமணியை ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, பூண்டு பற்கள் நான்கு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் தேவையான உப்பு மற்றும் வேகவைத்த காராமணியைச் சேர்த்து அரை கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். இரண்டு கொதிவந்தவுடன் நாம் தயாரித்து வைத்துள்ள புதினா விழுது தேவையான அளவு, பொட்டுக்கடலை மாவு இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

**

காலை நேரத்தில் சப்பாத்தி, பூரி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது இந்தக் குருமா.

**


**

வெஜ் பிரியாணி

**

ஒரு கப் பாஸ்மதி அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம் ஒன்று, பூண்டு பற்கள் நான்கு, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், நூல்கோல், உருளைக்கிழங்கு மொத்தமாக ஒரு கப் சேர்த்து, மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். பின்னர் இத்துடன் அரிசியையும் சேர்த்து வதக்கி கூடவே ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் ஒன்றரை கப் தண்ணீர், நாம் தயாரித்த புதினா விழுதையும் தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடவும். பின்னர் குக்கரில் வெயிட் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் குக்கரைத் திறந்து நெய்யில் பிரெட் துண்டுகளை வறுத்து இதில் சேர்க்கவும்.

**

மதிய நேரத்துக்கேற்ப பிரியாணி தயார்.

**


**

வாழைக்காய் மசாலா கறி

**

இரண்டு வாழைக்காயை தோல்சீவி தடிமனான துண்டுகளாக நறுக்கி தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து பாதியளவு வேகவைக்கவும். வெந்த வாழைக்காயில் நாம் தயாரித்து வைத்துள்ள புதினா மசாலாவைத் தேவையான அளவு சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலையைத் தாளிக்கவும். இதில் கலந்துவைத்துள்ள மசாலா வாழைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காய் நன்கு வெந்து மசாலாவும் காயும் ஒன்றாகச் சேர்ந்ததும் இறக்கவும்.

**

மாலை நேர சைடிஷ்ஷாகவும் இந்த மசாலா கறி அமையும்.

**


**ஹேப்பி சண்டே**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *