மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜுன் 2020

புதிதாக 1,438 பேருக்கு கொரோனா: விஜயபாஸ்கர்

புதிதாக 1,438 பேருக்கு கொரோனா: விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர். “தமிழகத்தில் ஒரே நாளில் 1405 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை, துபாய், மகாராஷ்டிரா என வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,438 ஆக இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் பாதிப்பு 28,694ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,116 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் பாதிப்பு 19,809ஆக இருக்கிறது.

இன்றைக்கு 15,692 மாதிரிகள் உட்பட இதுவரை 5.60 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சோதனை ஆய்வகங்கள் மொத்தம் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று 12 பேர் உட்பட இதுவரை 232 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 54.93 சதவிகிதம் பேர், அதாவது 15, 762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொடர்பான தகவல்களை அரசு வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்து வருகிறது. தமிழக அரசின் தரவுகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. களப்பணியாளர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தைத் தெரிவிக்க வேண்டாம்.

சென்னையில் 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து, வெண்டிலேட்டர், படுக்கை வசதி, எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர், மருத்துவமனைக்குச் சென்றால் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாமா என்ற விவரங்களையும், கட்டண விவரங்களையும் இணையதளம் மூலமாக வெளியிடவுள்ளோம். ஏற்கனவே ஒரு கோடியே 58 லட்சம் முதல்வரின் காப்பீடு அட்டைகள் உள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 77 சதவிகித மக்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவசமாகச் சிகிச்சை பெறலாம். மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத 23 சதவிகித பேருக்கான கட்டணத்தை நிர்ணயித்து இன்றுக்குள் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6ஆவது நாளாகப் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

வெள்ளி 5 ஜுன் 2020