மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜுன் 2020

சென்னை : வீட்டில் தனிமைப்படுத்தப்படும் திட்டம் ரத்தா?

சென்னை : வீட்டில் தனிமைப்படுத்தப்படும் திட்டம் ரத்தா?

கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் தொடர்பில் இருப்பவர்களை அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கமளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 4) காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்றால் கூட குடும்பத்தில் உள்ள அனைவரும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் கொரோனோ வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும். இந்த வைரஸ் தொற்றின் புரிதல்கள் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் வெளியே வருபவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நிலையில், 80 சதவிகித பேர் மட்டுமே அறிவுறுத்தலைப் பின்பற்றுவதாகவும் 20 சதவிகிதம் பேர் பின்பற்றுவது இல்லை என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வியாழன் 4 ஜுன் 2020