சாகசத்தின் போது விபத்து: மீண்ட ஃபீனிக்ஸ் சிறுமி!

public

ஸ்கை பிரவுன் எனும் சிறுமிக்கு வயது 11 தான். பிரிட்டனிலிருந்து அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படுவார் என்று நாடே நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் திறமையான ஸ்கேட்போர்டர் (skateboarder) இவர். சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற பயிற்சி ஒன்றின் போது கீழே விழுந்து மண்டையோடு மற்றும் கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர்மீது எதிர்பார்ப்போடு காத்திருந்த பலரும் கவலையோடு இருந்த நிலையில் ஸ்கை பிரவுன் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு விபத்து நடந்த அந்த வீடியோவை பதிவு அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்கை பிரவுன் பேசுவது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது. இதில் தனது ஆதரவாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக திரும்பி வந்த பிறகு மீண்டும் கடினமாக உழைக்க போவதாக கூறியுள்ளார் அந்த சிறுமி.

பொதுவாக நான் கீழே விழும் வீடியோக்களை எல்லாம் நான் சமூக வலைதளங்களில் பதிவிடுவது இல்லை. ஆனால் இது மிகவும் மோசமான விபத்து. எனவே என்னை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் கவலைப்பட வேண்டாம் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று கூறுவதற்காக இதை பதிவிட்டுள்ளேன். நன்றாக தான் இருக்கிறேன். என்று கூறியுள்ளார் பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட எல்லைகளை எல்லாம் இந்த வருடம் ஸ்கேட்டிங் மற்றும் சர்பிங் மூலம் தகர்க்க விரும்புகிறேன்.

2021 ஒலிம்பிக் போட்டிக்கு தங்க பதக்கத்தை நோக்கி நான் கண்டிப்பாக செல்ல இருக்கிறேன், என்னை எதுவும் தடுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஸ்கை.

பிபிசி செய்தி நிறுவனம் ஸ்கை பிரவுன் குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், விபத்து நடந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும், முதலில் சிகிச்சை கடினமாகவே சென்றதாகவும் ஆனால் தற்போது அவர் முழுவதுமாக குணமடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

ஸ்கேட்போர்டு பயிற்சி செய்யும்போது கீழே விழ முதலில் தலை மற்றும் பிறகு கைகள் தரையில் விழுந்தது என்று அவரது தந்தை ஸ்டீவர்ட் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ”முதலில் அவள் மருத்துவமனைக்கு வந்தபோது எல்லோரும் அவளின் உயிரை குறித்தே பயந்தோம். இதுவரை விழுந்த நிகழ்வுகளில் மிகவும் மோசமானதாக இந்த விபத்து அமைந்தது. அவள் உயிருடன் இருப்பதே அதிசயம். ஆனால் அப்போதும் நேர்மறை சிந்தனைகளுடனும், உறுதியாகவும் அவள் இருப்பதை பார்த்து மருத்துவக்குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்” என்றும் அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் ஸ்கை, 1928ஆம் ஆண்டு நீச்சல் வீராங்கனை மார்கரே ஹிண்டன் சாதனையான 13 வயது மற்றும் 45 நாட்களில் உலகக்கோப்பையில் கலந்துகொண்ட சாதனையை முறியடிக்க விரும்புகிறார்.

ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால், ஸ்கேட்போர்டு, மற்றும் ஸ்ர்ஃபிங் ஆகிய விளையாட்டுகள் இளம் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

** – பவித்ரா குமரேசன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *