wஆராய்ச்சியாளருக்கு கொரோனா: ஐசிஎம்ஆர் மூடல்!

public

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர்-ல் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஐசிஎம்ஆர் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் பணியாற்றிய அலுவலகங்கள் மூடப்பட்டு, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. காவல் நிலையங்கள், நிதி அயோக், ஐடி நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது ஐசிஎம்ஆர்-ல் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் கடந்த வாரம் மும்பைக்குச் சென்று மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று முடிவு வந்துள்ளது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்களுக்கு ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், கோவிட் -19 தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் மட்டும் அலுவலகம் வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்குக் கட்டுப்பாடு வழிமுறைகளை வழங்கியும், வைரைஸ் தொடர்பாக ஆராய்ச்சியும் மேற்கொண்டு வரும் ஐசிஎம்ஆர் மூடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் கடந்த வாரம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா மற்றும் ஐசிஎம்ஆரின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர்.ஆர்.கங்ககேத்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *