aஇவர்கள் ரயில் பயணத்தைத் தவிருங்கள்!

public

தற்போதைய சூழ்நிலையில் ரயில்களில் நோய் அறிகுறி உள்ளவர்கள் பயணம் செய்ய வாய்ப்புள்ளதால் கர்ப்பிணி போன்றோர் பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே வாரிய சேர்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் தொற்று இருப்பவர்கள் பயணம் செய்யக்கூடாது, பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்படும் எனப் பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை ரயில்வே வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

“தற்போது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு சில பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பிய பின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

இதனால் கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் பெரும்பாலும் ரயில் பயணங்களைத் தவிர்க்கவும். கட்டாயமாக பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே பயணம் செய்யலாம்” என ரயில்வே வாரியம் சேர்மன் வினோத் குமார் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *