மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

இன்று 874: தமிழகத்தில் 20,000த்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இன்று 874: தமிழகத்தில் 20,000த்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலைத் தினமும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரத்தை இன்று (மே 29) மாலை அறிவித்தது.

அதன்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 874 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 618 பேர் ஆவர். இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 141 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இன்று 765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,776ஆக உள்ளது.

மே 15ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108. ஆனால் அடுத்த 15 தினங்களுக்குள் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து இன்று 20,000த்தை கடந்துள்ளது.

-கவிபிரியா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon