மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பக்கோடா!

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பக்கோடா!

நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு வாழைத்தண்டுச்சாறு அருமருந்தாகும். அளவுக்கு அதிகமாக பக்கோடா சாப்பிட்டு அமிலத்தன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த வாழைத்தண்டு பக்கோடா வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மேலும் வாழைத்தண்டு சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப்பாதையைச் சுத்தமாக்கும்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

கடலை மாவு – 2 டம்ளர்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 2

இஞ்சி - பூண்டு விழுது – சிறிதளவு

மிளகாய்த்தூள் – சிறிதளவு

எண்ணெய் – கால் லிட்டர்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்துக்குக் கலந்து கொள்ளவும். இவற்றை எண்ணெயில் பொரித்தெடுத்தால் வாழைத்தண்டு பக்கோடா தயார்.

நேற்றைய ரெசிப்பி: வாழைத்தண்டு பட்டர் முறுக்கு

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது