மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கிச்சன்‌ கீர்த்தனா: வாழைத்தண்டு பட்டர் முறுக்கு!

கிச்சன்‌ கீர்த்தனா: வாழைத்தண்டு பட்டர் முறுக்கு!

வாழைத்தண்டில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டுச்சாறு நல்ல மருந்து. வாழைத்தண்டிலிருந்து சாறெடுத்து இந்த முறுக்கைச் செய்வதால் நீரிழிவாளர்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு வாழைத்தண்டு பட்டர் முறுக்கு சமைத்துக் கொடுத்து அசத்தலாம்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒன்று

அரிசி மாவு – 2 டம்ளர்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்

வெண்ணெய் – 50 கிராம்

எள் – ஒரு டீஸ்பூன்

ஓமம் – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறுசிறு துண்டாக வெட்டிக்கொண்டு மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு அனைத்தையும் ஒன்றாகப் பாத்திரத்தில் போடவும். அதில் வெண்ணெய், எள், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். இதனுடன் வாழைத்தண்டுச் சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு இதில் ஒரு டீஸ்பூன் சூடு செய்த எண்ணெயைச் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைய வேண்டும். கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி மாவை முறுக்குகளாகச் சுட்டெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைத்தண்டு ரசம்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது