மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

பத்தாம் வகுப்புத் தேர்வில் அனைவரும் தேர்ச்சியா?

பத்தாம் வகுப்புத் தேர்வில் அனைவரும் தேர்ச்சியா?

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அட்டவணை வெளியிட்டது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும், வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை தனிமைப்படுத்தி தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்நிலையில், ஈரோட்டில் இன்று (மே 24) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் தொடர்பாக பதிலளித்துள்ளார்.

அவரிடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, மாணவர்களின் மதிப்பெண்களை அரசு கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூன் 2ஆம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது. மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகள் திறப்பு எப்போது என்பது, சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

-கவிபிரியா

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon