மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

”கீதை நம்மை காக்குமா?” – ஜெ.ஜெயரஞ்சன்

”கீதை நம்மை காக்குமா?” – ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கு மற்றும் அதனால் நெருக்கடியை சந்தித்துள்ள பொருளாதார சூழல்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று மே 23 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் செய்தியாளர் சந்திப்பின் அறிவிப்புகள் குறித்து பேசியுள்ளார்.

ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் ஆகியவற்றை குறித்து தெளிவாக விளக்கியுள்ள ஜெயரஞ்சன், ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தை குறைத்து வருகிறது. இதன்மூலமாக ரிசர்வ் வங்கியின் திட்டம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தொழிற்முனைவோர்கள் அதிகமாக முதலீடு செய்யும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும் என கணக்கிட்டது ரிசர்வ் வங்கி. அது நிறைவேறியதா என்று பார்த்தால், ரிசர்வ் வங்கியின் கணக்கு நிறைவேறவே இல்லை.

ரெப்போ விகிதத்தை குறைத்த போதும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காமல் ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து டெபாசிட் செய்து வருகிறது. இதற்கு காரணம் மக்களுக்கு கடன் கொடுத்தால் பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கை இந்த சூழ்நிலையில் வங்கிகளுக்கு இல்லை என விளக்கியுள்ளார்.

சக்திகாந்த தாஸ் கூறிய மற்றொரு முக்கிய விஷயமாக ஜிடிபி மதிப்பு கடந்த ஆண்டை விட குறையும் என்பதுதான் எனக் கூறிய ஜெயரஞ்சன் ஜிடிபி மதிப்பின் முக்கியத்துவத்தையும் குறித்து விளக்கியுள்ளார்.

தேவையை அதிகரிப்பதே இந்த சிக்கலிலிருந்து மீட்க ஒரே வழி, கடைசி நுகர்வோரின் கையில் பணம் கொடுப்பதே சரியானது என பல பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அரசு அதை காதில் வாங்கிக்கொள்ள மறுக்கிறது என விளக்குகிறார்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட போவது என்னவோ அடித்தட்டு மக்கள்தான், அவர்களை பற்றி கவலைப்படாத அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயரஞ்சன்.

முழு காணொலியையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

- பவித்ரா குமரேசன்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon