சென்னையில் 569 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 700ஐ தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலம் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வந்த ஒருவர் உட்பட மாநிலம் முழுவதும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 569 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 846 பேர் உட்பட மொத்தம் 7,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் உட்பட தமிழகத்தில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,524. இதுவரை 3,68,939 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 13,967ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 14,753 ஆக அதிகரித்திருக்கிறது.
-கவிபிரியா