மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு கொரோனா!

மின்னம்பலம்

இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 6,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 5,611 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 6,000த்தை கடந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே 22) காலை வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 66,330 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 3,583 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

48,533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 40.97 சதவிகிதமாக உள்ளது.

மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1454 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11726 ஆக உள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்தில் 13,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் ரயில் சேவையும், 25ஆம் தேதி முதல் 383 வழித் தடங்களில் விமானச் சேவையும் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon