மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வை எப்படி நடத்துவீர்கள்: நீதிமன்றம் கேள்வி!

கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வை எப்படி நடத்துவீர்கள்: நீதிமன்றம் கேள்வி!

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படி நடத்துவீர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிக் கல்வித் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் .சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காரல்மார்க்ஸ், “சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகள் எல்லாம் ஜூலையில் தான் நடைபெறுகிறது. கல்லூரி தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுகிறது.

வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள இடங்களில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்று மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்தது. ஆனால் தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, உரியப் பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று வாதிட்டார். தொடர்ந்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அப்போது, சென்னையில் வைரஸ் தொற்று பரவலாக இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைத்து எப்படித் தேர்வை நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து எப்படி மாணவர்கள் வரமுடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கு விசாரணையையும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் இது தொடர்பாகப் பதில் அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.

-கவிபிரியா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 21 மே 2020