மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமாட்டோ!

மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமாட்டோ!

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ, மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மூடப்பட்ட மதுபான கடைகள் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. எனினும் ஆன்லைன் மூலம் மதுபானங்களை டெலிவரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தநிலையில், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம், தற்போது மதுபானம் டோர் டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்விக்கி, தற்போது இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது கிளையைப் பரப்பிச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று முதன் முதலாக ராஞ்சியில் மதுபானத்தை டோர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த சேவை விரைவில் பல்வேறு நகரங்களிலும் தொடங்கும் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. ஸ்விக்கி செயலியில் இருக்கும் ஒயின்ஷாப் என்ற பிரிவின்கீழ் டோர் டெலிவரி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பின் மூலம் சிறிய சிறிய பகுதிகளுக்கும் டெலிவரி செய்ய முடிகிறது. நாங்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கி பணியாற்றிவருகிறோம். சட்டத்துக்கு உட்பட்டு, வயது சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடித்துப் பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வயதை சரிபார்ப்பதற்காக அவர்களின் அரசின் அடையாள அட்டையையும் , ஒரு செல்ஃபியையும் பதிவிட வேண்டும். அது செயற்கை நுண்ணறிவு மூலம் சரிபார்க்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.

இதுபோன்று சொமாட்டோவும் ஜார்க்கண்டில் மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடவுள்ளது. ராஞ்சியில் நாளை முதல் தனது சேவையைத் தொடங்க இருப்பதாகவும் அடுத்த இரு நாட்களில் மேலும் 7 நகரங்களில் இந்த சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மதுவை ஒரு குறிப்பிட்ட அளவோடு உட்கொள்வதற்குக் காரணமாக அமையலாம் என்று சொமாட்டோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 21 மே 2020