மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

ஆம்பன் புயலால் 72 பேர் உயிரிழப்பு!

ஆம்பன் புயலால் 72 பேர் உயிரிழப்பு!

6 மணி நேரம் நீடித்த ஆம்பன் புயலின் அதிபயங்கர காற்றினால் மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் பொருட்கள் சேதமடைந்துள்ளன.. புயலால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அதிக பாதிப்புக்கு உள்ளானதால் இன்று காலை 5 மணி வரை விமான நிலையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது சரக்கு பரிமாற்றம் மற்றும் மக்களை வெளியேற்றுவதற்கான விமானங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன.

நேற்று மதியம் 2.30 மணிக்கு வீசத் தொடங்கிய பயங்கர காற்றினால் மின்சார இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் கொல்கத்தாவிலும் மேற்கு வங்க மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பல்வேறு கட்டடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

”இது ஒரு பேரழிவு” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். புயல் முடியும் வரை அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விட புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிக மோசமாக இருப்பதாகவும். புயலால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஏரியாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், ஐந்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இருந்தும் புயலின் கொடூரத் தன்மையை அதிகாரிகள் கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட உயர் புயல் இதுவாகும் . 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் ஒடிசாவில் தாக்கியபோது பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 21 மே 2020