மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு!

மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே  சிபிஎஸ்இ பொதுத் தேர்வு!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளியிலேயே நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்திருந்தது.

தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், தேர்வை எதிர்கொள்ளத் தீவிரமாகப் பயின்று வருகின்றனர். மறுபக்கம் தேர்வை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (மே 21) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் தேர்வுகளை அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என்றும் வெளியிடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பு நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கியிருப்பதால் ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், தேர்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 21 மே 2020