மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பொடி

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பொடி

இன்றைய பெண் சமுதாயம் உடலளவிலும் மனதளவிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பூப்பெய்தல் நிலையில் உள்ள பெண்கள் முதல் மெனோபாஸ் காலம் வரை உள்ள பெண்கள் உடலளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதைச் சரிசெய்யும் விதமாக, பெண்களுக்குத் தேவையான சத்தான, ஆரோக்கியமான, அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளை சமைத்து உண்பது பெண்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்கும் ஏற்றது. அதற்கு இந்த ஹெர்பல் பொடி உதவும். உடலை வலுப்படுத்தி எலும்புகளை உறுதிப்படுத்தி திடமாக வாழ வழிசெய்யும் இந்தப் பொடி.

என்ன தேவை?

கறுப்பு உளுந்து - ஒரு கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5 - 6

பெருங்காயம் - ஒரு துண்டு

கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு

சுத்தம் செய்து உலர்த்திய முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதே கடாயில் வெந்தயம், பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து இவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்து இவற்றுடன் உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் கலந்து நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டு சூடாகச் சாப்பிடவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். பொரியல் செய்து இறக்கும்போது இதை ஒரு டீஸ்பூன் தூவி இறக்கலாம்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 21 மே 2020