மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

விமான பயணிகளுக்கான புது விதிமுறைகள்!

விமான பயணிகளுக்கான  புது விதிமுறைகள்!

நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அமலில் இருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு வருவதற்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் மே 25 முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில், உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய வழிமுறைகளை வகுத்து இந்திய விமான நிலைய ஆணையம் இன்று (மே 21) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,விமான நிலையங்களுக்குப் பயணிகள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதியை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை அடைய வேண்டும். பல நடைமுறைகள் பின்பற்றப்பட இருப்பதால் 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்.

கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார்/ மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நெருக்கடி ஏற்படாமல் போதிய சரீர இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும்.

பயணிகள் கட்டாயம் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

ஆரோக்கிய சேது இல்லாத பயணிகள் விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயம் மொபைலில் டவுன்லோட் செய்திருக்க வேண்டும்.

வெப்பமானி மூலம் பயணிகள் கண்டிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள்.

டெர்மினலுக்குள் நுழைந்ததும் பயணிகளின் லக்கேஜ் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும்.

பயணிகளைச் சந்திக்கும் போது, ஊழியர்கள் பேஸ் ஷீல்டு அணிந்திருக்க வேண்டும்.

சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளைப் பற்றிய நிலையான அறிவிப்புகள் வெளியிடப்படும்,

சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகப் பயணிகள் குழுக்களாகப் பிரித்து விமானங்களில் ஏற்றப்படுவார்கள்.

விமான நிலைய ஊழியர்கள் பிபிஇ உடை அணிந்திருக்க வேண்டும்.

செல்பேசியில் பயணச்சீட்டைக் காட்டியதும் இயந்திரம் மூலம் போர்டிங் பாஸ் வழங்கப்படும்.

வருகை பகுதிகளில் ட்ராலிகளுக்கு அனுமதி இல்லை

விமான நிலையத்தில் காத்திருக்கும் போது சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்

என பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது விமான போக்குவரத்து ஆணையம்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 21 மே 2020