மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

50 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்!

50 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்!

வரும் 18ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது முறையாக மே 3 ஆம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டன. அதாவது, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளிலுள்ள கடைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் இன்று காலை தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் அலுவலகங்கள் 33% பணியாளர்களோடு இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம், அரசு அலுவலகங்கள் திறப்பது தொடர்பாக சில வழிமுறைகளை சுற்றறிக்கையாக இன்று (மே 15) அனுப்பியுள்ளார்.

அதில், வரும் 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விட்டு பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே நிறைய பணி நேரங்களை இழந்துவிட்டதால் வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களுக்கு அரசு அலுவலகங்கள் செயல்படும். சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியாற்றுவார்கள்.

முதல் பிரிவினர் திங்கள், செவ்வாய்கிழமைகளில் பணியாற்றுவார்கள்; இரண்டாவது பிரிவினர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பணியாற்றுவார்கள். இப்படியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். குரூப்-ஏ அதிகாரிகள் அனைத்து அலுவலக நாட்களிலும் பணிக்கு வர வேண்டும். ஊழியர்களுக்குத் தேவையான பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில்

வெள்ளி, 15 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon