மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்!

எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்!

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றாலும், டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை அரசு மருத்துவமனையையே நாடி வந்தனர். ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக தனியார் மருத்துவமனைகளிலும் விருப்பப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு இன்று (ஏப்ரல் 4) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் விருப்பமுள்ளவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் சொந்தச் செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதுபோன்று தனியார் மருத்துவமனைகளும் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தினசரி நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

110 தனியார் மருத்துவமனைகளின் விவரம்

சென்னை

>போர்ட்டீஸ் மலர் மருத்துவமனை, அடையாறு

>தி வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி

>பிரசாந்த் மருத்துவமனை- வேளச்சேரி

>பில்ராத் மருத்துவமனை, ஷெனாய் நகர்

>காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, நுங்கம்பாக்கம்

>சிஎஸ்ஐ கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்

>காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை

>மியாட் மருத்துவமனை, மணப்பாக்கம்

>விஜயா மருத்துவமனை, வடபழனி

>ஜெம் மருத்துவமனை, பெருங்குடி

>காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, பள்ளிக்கரணை

கோவை

ஜி குப்புசாமி நாயுடு மெமோரியல் (ஜிகேஎன்எம்) மருத்துவமனை,

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை,

கோவை கே.ஜி. மருத்துவமனை,

கோவை கொங்குநாடு மருத்துவமனை

சேலம்

அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கொம்பாடிப்பட்டி. விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சீரங்கப்பாடி.

என தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

அடுத்ததுchevronRight icon