Qகொரோனா: 2ஆவது இடத்தில் தமிழகம்!

public

கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்துக்கு நகர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தற்போது இரண்டாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 7ஆம் தேதி நிலவரப்படி ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக இருக்கிறது. நாள்தோறும் சுகாதாரத் துறை வெளியிடும் தகவலின்படி, இரு தினங்களுக்கு முன்பு வரை டெல்லி சென்று வந்த 80 பேர் உட்பட பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 124ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த முன்தினம் 234ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் வீட்டு கண்காணிப்பில் 86,342 பேர் உள்ளனர், இதில் அரசு கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர். தற்போது 4,070 பேர் 28 நாட்கள் கண்காணிப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளனர்

நேற்று வரை தமிழகத்தில் 234 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர், தற்போது மட்டும் 75 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 74 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள், ஒருவர் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது தமிழகம் முழுவதும் மொத்தம் 309 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் தற்போது தமிழகம் இந்தியளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *