மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனா: மோடியின் ஒலியும் ஒளியும்!

கொரோனா: மோடியின் ஒலியும் ஒளியும்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத்  தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த   21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு  மேலும்  சில   நாட்கள் நீட்டிக்கப்படுமோ என்று நாட்டில் பலரும்  பரபரத்துக் கொண்டிருந்த நிலையில்..  கொரோனா பற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி  இன்று (ஏப்ரல் 3)  காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். 

 “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒன்பது நாட்களை கடந்திருக்கிறோம். ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.  நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அனைவரும்  ஒன்றிணைந்து செயல்படுவது பாராட்டத் தக்கது.  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.இந்த காலகட்டத்தில் நம் அனைவரின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, ஒன்பது நிமிடங்கள் மெழுகுவர்த்திகளையும், செல்போன் டார்ச் லைட்டுகளையும் ஒளிரவிட வேண்டும்.  இதன் மூலம்  நம் சக்தி வெளிப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கடந்த மார்ச் 22 ஆம் தேதி  சுய  ஊரடங்குக்கு அழைப்பு விடுத்த மோடி அன்று மாலை 5 மணிக்கு எல்லாரும் வாசலுக்கு வந்து கைகள் தட்டி, மணியடித்து ஒலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதுபோலவே இப்போது ஒளி எழுப்ப அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் கைதட்டியபோது கூட்டம் சேர்த்தது போல் இப்போது கூட்டம் சேர்க்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி

-வேந்தன்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon