உதவிக்கு சென்னை மாநகராட்சியின் அழைப்பு எண்கள்!

public

y

ஊரடங்கு உத்தரவால் வெளியே வர முடியாத முதியவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர, பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக, பல்பொருள் அங்காடிகள், மளிகை பொருட்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி சேகரித்துள்ளது.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் பாதித்தவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கடைகளின் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தங்களுக்குத் தேவையானவற்றை கூறினால், வீடுகளுக்கே விநியோக செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதற்காக, தென்சென்னை மக்கள் 89396 31500; வடசென்னை 94454 77658; மத்திய சென்னை 94451 90698 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மாதவரம் மண்டல மக்கள் 94450 36583, 044 – 2553 1134 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கொரோனா குறித்த தகவல்களுக்கும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *