eஊரடங்கு: விவசாயப் பணிகளுக்கு விலக்கு!

public

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவில் இருந்து விவசாய பணிகளுக்கு விலக்கு அளித்து மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் சமூகத் தொற்று வகையில் பரவுவதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்திருக்கிறார்.

நகரங்கள், மாநகரங்களில் இந்த உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் கிராமங்களில் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயத் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுந்தது.

மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதத்தில்.. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மார்ச்சு மாத இறுதியில் தான் விவசாய அறுவடை நடக்கும். எனவே விவசாயிகளின் அறுவடை பணிகள் பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்”என்று வலியுறுத்தியிருந்தார்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஊரடங்கு உத்தரவிலிருந்து விவசாய பணிகளுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு விவசாய பணிகளுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளித்தது. இதையடுத்து நேற்று தமிழக அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அரசாணையில்….

விவசாயப் பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள், உர விற்பனை நிலையங்கள், விவசாயப் பணிகள் மற்றும் விவசாயக் கூலி பணிகள், உரம் விதைகள் பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள், மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு தடை நீக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பணிகளுக்கான ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும்.. போதிய சமூக இடைவெளியோடும் பாதுகாப்பு கவசங்களுடனும் பணி செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

**வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *