மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் சென்ற வாலிபர்!

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் சென்ற வாலிபர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் சாப்பிட உணவுகூட இல்லாமல் 135 கிலோமீட்டர் நடந்தே தினக்கூலி வாலிபர் ஒருவர் சொந்த ஊரை அடைந்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மகாராஷ்டிரா அரசு கடுமையாகப் பின்பற்றி வருகிறது. வாகனங்கள் ஏதும் ஓடாததால் அங்குள்ள மக்கள் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் நாக்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தற்போது வேலை இல்லாததால் சொந்த மாவட்டத்துக்குச் செல்ல முடிவு செய்தார். வாகனம் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊரை அடைய வேண்டும் என எண்ணி நடக்க ஆரம்பித்தார். சுமார் 135 கிலோமீட்டர் தூரம் கடைகள் எதுவும் இல்லாததால் சாப்பிடுவதற்கு உணவின்றி நடந்தே சொந்த ஊரை அடைந்துள்ளார்.

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon