மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

கிச்சன் கீர்த்தனா: புரோட்டீன் அடை!

கிச்சன் கீர்த்தனா: புரோட்டீன் அடை!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பலர் பசியெடுக்கும்போது எதையாவது தின்று வயிற்றை நிரப்புகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சத்தான, தரமான உணவையும் நேரத்துக்கேற்ப சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியம். அந்த வகையில் இந்த புரோட்டீன் அடை செய்து சாப்பிடுங்கள். இது நல்ல முழுக்க புத்துணர்ச்சியைத் தரும். பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான பாஸ்பரஸ் இந்த அடையில் உள்ளது.

என்ன தேவை?

முட்டை - ஒன்று

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு

பொட்டுக்கடலை - 150 கிராம்

வெங்காயம் - ஒன்று (பெரியது)

பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப

பூண்டு - 4 பல்

இஞ்சி - சிறிதளவு

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பொட்டுக்கடலையுடன் உப்பு, முட்டை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுப் பல் சேர்த்து நீர்விட்டு அரைக்கவும். தோசை செய்யும் பதத்துக்கு மாவைக் கரைத்துக்கொண்டு அத்துடன் சிறிதளவு எண்ணெயில் வதக்கிய முருங்கைக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து, அடை செய்து கொள்ளவும்.

நேற்றைய ரெசிப்பி: சிம்ளி உருண்டை

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon