மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

கொரோனா முகாமிலிருந்து தப்பிய காதலன் - கட்டுப்பாட்டுக்குள் காதலி

கொரோனா முகாமிலிருந்து தப்பிய காதலன் - கட்டுப்பாட்டுக்குள் காதலி

மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞரை அவரது காதலி வீட்டில் போலீஸார் பிடித்துள்ளனர்.

துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞரை, பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைக்காக மதுரையில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைத்தனர்.

முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று (மார்ச் 26) அதிகாலை தப்பி ஓடியதால், அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. முகாமில் இருந்து தப்பியோடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் அவரை கைது செய்து மதுரைக்குக் கொண்டுவந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காதலியின் வீட்டைக் கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-ராஜ்

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon