மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கொரோனா போர் : சிகிச்சைக்கு ஈஷா வளாகத்தைப் பயன்படுத்த அனுமதி!

கொரோனா போர் : சிகிச்சைக்கு ஈஷா வளாகத்தைப் பயன்படுத்த அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈஷா வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சத்குரு ஜகி வாசுதேவ் அனுமதி வழங்கியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தத் தமிழக அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றவும் ஈஷா தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளையும் இந்த சவாலான சூழலில் மக்களுக்குச் சேவையாற்ற உறுதி ஏற்றுள்ளது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஈஷா தன்னார்வலர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், “கொரோனா வைரசால் பாதிப்புக்கு உள்ளாகும் தினக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதைச் செய்ய முன் வர வேண்டும்.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையின் காரணமாக, பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவளித்து உதவ வேண்டும். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்ற நிலை வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதைச் செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து, பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோகா மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த வாரம் முதல் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020