மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 27ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 27ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துபாயிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்னல் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். நேற்று வரை 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 26), ”துபாயிலிருந்து திருச்சி வந்த 29 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நிலை சீராக இருக்கிறது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஏற்கனவே தமிழகத்தில் மதுரையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவரது ரத்த மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், சோதனை முடிவுகள் வருவதற்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். இவர் குவைத் சென்றுவிட்டு மார்ச் 3ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 26 மா 2020