மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

ஊரடங்கு உத்தரவு: போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் மரணம்!

ஊரடங்கு உத்தரவு: போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் மரணம்!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி வெளியே வரும் பலரையும் போலீசார் கண்டித்தும் கெஞ்சியும் வீட்டிற்கு அனுப்பும் பல வீடியோக்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையிலும் காவல்துறையினரால் பலர் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த 32 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதற்குப் பிறகு அவர் மரணமடைந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள்தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மரணமடைந்த லால் சுவாமியின் மனைவி கூறும்போது, பால் வாங்குவதற்காகத் தனது கணவர் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் அங்குத் தெருக்களில் மக்கள் கூடுவதைத் தடுத்துக் கொண்டிருந்த காவல்துறையினர், லத்தியைக் கொண்டு தாக்கியதாகவும் ABP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது மரணம் அடைந்த நபர் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்வது மிகப்பெரிய தவறுதான் என்றாலும், அவசியத் தேவைகளுக்கு வெளியே செல்லாமல் இருக்கமுடியாது என்பது தான் உண்மை. இதை அறிந்து காவல்துறையினரும் மக்களும் செயல்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020