மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கோவை: முக கவசம் தயாரிக்கும் சிறை கைதிகள்!

கோவை: முக கவசம் தயாரிக்கும் சிறை கைதிகள்!

கொரோனா பாதிப்பின் காரணமாக கோவையில் முக கவசம் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க முக கவசம் தயாரிக்கும் பணியில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான இடத்தில் சிறை பஜார் உள்ளது. இங்கு சிறை கைதிகள் மூலம் உணவு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கைதிகள் பணியாற்றி வருகின்றனா். மேலும் அங்கு பேக்கரி பொருட்கள், சோப் ஆயில், பினாயில், காக்கி சீருடை துணி, செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி தெளித்தும் வருகின்றனர். கோவை அரசு ஆஸ்பத்திரி உட்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் முக கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் முக கவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை மத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், “கோவை மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை பஜார் மூலம் விற்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மத்திய சிறை கைதிகள் மூலம் முக கவசம் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக 20-க்கும் மேற்பட்ட கைதிகளுக்குத் தனியார் நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. முக கவசம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் சிறைத் துறை நிர்வாகத்தால் கொள்முதல் செய்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து முக கவசம் தயாரிக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 2,000 முக கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. சிறைத் துறை உயரதிகாரிகளிடம் ஆலோசித்து, முக கவசத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன் பிறகு சிறை பஜார் மூலம் முக கவசம் விற்பனை செய்யப்படும்” என்று கூறினார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020