மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

மருத்துவமனைகளாக மாறும் ரயில் பெட்டிகள்!

மருத்துவமனைகளாக மாறும் ரயில் பெட்டிகள்!

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குக் கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுவதால் ரயில் பெட்டிகளை மருத்துவமனை வார்டுகளாக மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 124 பேர் உட்பட இந்தியா முழுவதும் 649 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். அதுபோன்று கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். ஆனால் அவருக்கு கொரோனா குறித்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இவ்வாறு இந்தியாவில் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அவசர வார்டுகள் ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ், அனைத்து மண்டலங்களின் பொது மேலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் முடிவில், ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்துள்ளது. மேலும் தேவையான மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்களை தயாரிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 1,000 பேருக்கு 0.7 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதை இரண்டு படுக்கைகளாக உயர்த்த இலக்கு வைத்துள்ள நிலையில், நாட்டில் 1,000 பேருக்கு குறைந்தது 3 படுக்கைகளாவது வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020