மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கிச்சன் கீர்த்தனா: சிம்ளி உருண்டை

கிச்சன் கீர்த்தனா: சிம்ளி உருண்டை

கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் மட்டுமல்லர்; பள்ளி விடுமுறை என்பதால் வீட்டை வலம் வரும் குழந்தைகளுக்கும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பாக்கெட்டுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீது கவனம் திரும்பும். அந்தப் பொருள்களில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், கூடுதல் சர்க்கரை ஆகியவை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தனது பணியைச் செய்யவிடாமல் தடுக்கும்.

மேலும், அவை குடலிலுள்ள நல்ல பாக்டீரியாவைத் தாக்கி, உடலுக்குத் தீமை விளைவிக்கும் பாக்டீரியா உற்பத்திக்கு வழிவகுத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் இந்த சிம்ளி உருண்டையைச் செய்து வைத்து தேவையானபோது கொடுங்கள். இதை மாலை நேர சிற்றுண்டியாகவும் பரிமாறலாம். ஒரு வாரம் வரையிலும் கெடாமல் வைத்திருக்கலாம். இரும்புச்சத்து மிகுந்த இந்த உருண்டை வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

கேழ்வரகு மாவு - 200 கிராம்

வேர்க்கடலை - 50 கிராம்

கறுப்பு எள் - 25 கிராம்

தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)

கருப்பட்டி - 200 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

ஏலக்காய் - 2 (பொடிக்கவும்)

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவுடன் சிறிதளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். சூடான தவாவில் அந்த மாவை அடை போல் தட்டி நெய்விட்டு சுட்டெடுத்துக்கொள்ளவும். கல் உரல் அல்லது மிக்ஸியில் எள், வேர்க்கடலையை முதலில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். ஆறிய அடையைச் சிறிது சிறிதாகப் பிய்த்து, அதையும் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். அத்துடன் பொடித்த கருப்பட்டி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020