மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு

இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது கொரோனா வைரஸ். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்கு பலரும் பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்திய முறைப்படி வணக்கம் சொல்வதால் வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என பல உலக தலைவர்களும் வணக்கம் சொல்லும் முறைக்கு மாறிய வீடியோக்களை நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம்.

இவற்றில் ஒருபகுதியாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், மற்றவர்களை சந்தித்து பேசும் பொழுது தனது கைகளை கொடுக்க மறுத்து வணக்கம் சொல்லும் காட்சிகளும் வெளியானது.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது

71வயதாகும் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசிற்கான சில அறிகுறிகளை கொண்டிருந்தாலும் நல்ல உடல் நிலையோடு இருப்பதாக அரச குடும்பத்து செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா இருவரும் ஸ்காட்லாந்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் யாரிடமிருந்து இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020